ஃபேஸ்புக் தளத்தில் புதிய வீடியோ அம்சங்கள் – ஒரு விரைவுப் பார்வை.!

வீடியோ சார்ந்த அம்சங்களில் ஃபேஸ்புக் தளத்தில் பெரிய அளவில் மாற்றம் செய்துள்ளதாக மெட்டா அறிவித்துள்ளது.

ஹெச்டிஆர் தளத்தில் வீடியோக்களை அப்டேட் செய்வது, வீடியோ எடிட்டிங் டூல் போன்றவை இதில் அடங்கும் எனத் தெரிகிறது. இது சார்ந்த அப்டேட் படிப்படியாக பயனர்களின் பயன்பாட்டுக்கு கிடைக்கப் பெறும் என தெரிகிறது.

ஃபேஸ்புக் தளத்தின் முக்கிய அங்கமாக வீடியோ உள்ளது. அதை கருத்தில் கொண்டு வீடியோவை உருவாக்குவது, பார்ப்பது மற்றும் வீடியோ என்கேஜ்மென்ட் போன்றவற்றில் பயனர்களை ஈடுபட செய்யும் வகையில் புதிய மாற்றங்களை கொண்டு வருவதாக மெட்டா தெரிவித்துள்ளது.

அதன்படி ஃபேஸ்புக் தளத்தில் தற்போது ஃபேஸ்புக் வாட்ச் என அறியப்படும் டேபை ஃபேஸ்புக் வீடியோ என மாற்றப்படுகிறது. இதில் வீடியோ சார்ந்த அனைத்தையும் பயனர்கள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரீல்ஸ், லாங்க் – ஃபார்ம் வீடியோ, லைவ் கன்டென்ட் அல்லது பிரபல கிரியேட்டர்ஸ் வீடியோ போன்றவை இருக்கும் என தெரிகிறது. இதற்கான ஷார்ட்கட்டை பயனர்கள் விரைவில் பெறுவார்கள் என மெட்டா தெரிவித்துள்ளது.

இவை அனைத்தும் இடமிருந்து வலமாக (Horizontal) வடிவில் பயனர்கள் ஸ்க்ரால் செய்வதன் மூலம் பெற முடியுமாம். பயனர்களுக்கான பெர்சனலைஸ்ட் வீடியோ ஃபீட்களை கீழிருந்து மேலாக (Veritcal) ஸ்க்ரால் செய்து பார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிகிறது. இது தவிர ரீல்ஸ் எடிட்டிங் அம்சம் கொண்ட வீடியோ எடிட்டிங் டூலை பயனர்கள் ஃபேஸ்புக் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.