அதிக லாபத்தை ஈட்டியுள்ள ஈஷா அம்பானி மேற்பார்வையிலான ரிலையன்ஸ் ரீடைல்!

ஈஷா அம்பானியின் மேற்பார்வையில் செயல்பட்டு வரும் ரிலைனஸ் ரீடைல் நிறுவனம் கடந்த காலாண்டை விட இந்த காலாண்டில் 21% அதிக லாபத்தை ஈட்டியுள்ளது.

இந்தியாவில் மிகப்பெரிய வணிகச் சந்தையை வைத்திருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மார்ச் காலாண்டு முடிவுகளை ரிலையன்ஸ் ரீடைல், ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என தனித்தனியாக வெளியிட்டிருக்கிறது.

அதில் ரிலையன்ஸ் ஜியோ முடிவடைந்த காலாண்டில் சுமார் 13 சதவீதம் உயர்ந்து 4,716 கோடியாக அதிகரித்துள்ளது. ரிலையன்ஸ் ரீடைல் மார்ச் காலாண்டில் 2415 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை பெற்றுள்ளது. இது கடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டில் பெற்ற 2139 கோடி ரூபாய் லாபத்தை ஒப்பிடுகையில் 13 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

மேலும் 2023 ஆம் நிதியாண்டு முழுவதும் ரிலையன்ஸ் ரீடைல் 9181 கோடி ரூபாயை லாபமாக பெற்றுள்ளது, இது கிட்டதட்ட 1.1 பில்லியன் டாலராகும். ஈஷா அம்பானியின் அதிகப்படியான தலையீட்டில் தான் ரிலையன்ஸ் ரீடைல் இயங்குகிறது குறிப்பிடுகிறது. மார்ச் காலாண்டில் ரிலையன்ஸ் ரீடைல் வருவாய் 21 சதவீதம் அதிகரித்து ரூ.61,559 கோடியாக உள்ளது, இது கடந்த நிதியாண்டில் ரூ.50,834 கோடியாக இருந்தது.

இந்தக் காலாண்டில் மளிகை பொருட்கள், கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ், பேஷன் மற்றும் லைப்ஸ்டைல் பிரிவில் அதிகப்படியான வருவாய் வளர்ச்சி பதிவாகியுள்ளது.மார்ச் காலாண்டில் மட்டும் சுமார் 966 புதிய கடைகளை திறந்து சுமார் 219 மில்லியன் வாடிக்கையாளர்களை தனது கடைக்குள் ஈர்த்துள்ளது. மார்ச் காலாண்டில் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிஸ் பிரிவு சுமார் 35 சதவீத அதிக வருவாயை ஈட்டியுள்ளது. பேஷன் மற்றும் லைப்ஸ்டைல் பிரிவு 19 சதவீத அதிக வருவாய் ஈட்டியுள்ளது.