அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் 2வது முறையாக பேசுகிறார் பிரதமர் மோடி!

அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி 2வது முறையாக நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பேசுகிறார்.

அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி 2வது முறையாக நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பேசுகிறார்.

அரசுமுறை பயணமாக வருகிற 22ம் தேதி அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி. அப்போது அந்நாட்டில் நடக்க இருக்கும் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பேச இருக்கிறார். நாடாளுமன்றத்தில் பேசுவதற்காக பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்து பிரதிநிதிகள் அவைத் தலைவர் கெவின் மெக்கார்த்தி, செனட் அவையின் பெரும்பான்மைத் தலைவர் சுக் ஷூமர் உள்ளிட்டோர் கையெழுத்திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக பேசிய தலைவர்களில் பட்டியலில் வின்ஸ்டன் சர்ச்சில், நெல்சன் மண்டேலாவுக்குப் பிறகு பிரதமர் மோடிக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி இந்தியாவின் எதிர்காலம் தொடர்பான தனது தொலைநோக்குப் பார்வை, இரு நாடுகளும் எதிர்கொண்டுள்ள உலகளாவிய சவால்கள் ஆகியவை குறித்து பேச இருப்பதாக சொல்லப்படுகிறது.