அரசுமுறை பயணமாக அமெரிக்காவிற்கு புறப்பட்டா பிரதமர் மோடி – சிறப்பு விருந்து அளிக்கும் ஜோ பைடன்!

நான்கு நாட்கள் அரசுமுறை பயணமாக இன்று அமெரிக்கா புறப்பட்டார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி!

நான்கு நாட்கள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவிற்கு இன்று புறப்பட்டார் பிரதமர் மோடி. அவரை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ஜில் பைடன் ஆகியோர் முறைப்படி வரவேற்கின்றனர். இதன்பின் அவர்கள் இருவரும் வருகிற 22-ந்தேதி பிரதமர் மோடிக்கு சிறப்பு விருந்து அளிக்க உள்ளனர்.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, அமெரிக்கா முழுவதும் நியூயார்க் உள்பட 20 பெரிய நகரங்களில் இந்திய-அமெரிக்கர்கள் ஒன்று திரண்டு, அவரை வரவேற்கும் வகையில் ஒற்றுமை பேரணியை நடத்தினர். அதில், இந்தியா மற்றும் அமெரிக்க நாட்டு தேசிய கொடிகளை ஏந்தியபடியும், பிரதமர் மோடியின் உருவம் கொண்ட போஸ்டர்கள் ஏந்தியபடி சென்றனர்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருந்து பொருட்களை வழங்கி உதவியது, கொரோனா தடுப்பூசி பல்வேறு நாடுகளுக்கு வழங்கியது உள்பட சமீபத்திய ஆண்டுகளில் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் அமெரிக்காவில் இந்தியாவின் நன்மதிப்பு உயர்ந்து காணப்படுகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடியின் அமெரிக்க பயண நிகழ்வை உலக நாடுகள் கவனித்து வருகின்றன.

பொருளாதார முதலீடு மற்றும் தொழில் நுட்பம் ஆகியவற்றை பெறுவது மட்டுமின்றி, தற்போது பயன்படுத்தி வரும் ஆளில்லா விமானங்கள் உள்பட பாதுகாப்பு சாதனங்களையும் பெறும். அவற்றை கடல்பகுதியில் பயன்படுத்த கூடும் என சொல்லப்படுகிறது.