அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு அறிவித்துள்ள முதலமைச்சர்!

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே 38% அகவிலைப்படி வழங்கப்பட்டு வரும் நிலையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 4% அதிகரித்து 42% வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.

அகவிலைப்படி உயர்வால் ஆண்டு ஒன்றுக்கு தமிழக அரசுக்கு ரூ.2,366.82 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.