ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் ஜெயிலர்!

ரஜினி நடிக்கும் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. அதில், முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், சுனில், தமன்னா உள்ளிட்டவரகளின் காட்சிகளும்.. இறுதியில் மாஸாக காரில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினி இறங்கு காட்சியில் இடம்பெற்றுள்ளது.

இந்த திரைப்படத்தின் பணிகள் நிறைவடையும் தருணத்தில் உள்ள நிலையில், படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக டீசர் மூலம் அறிவித்திருக்கிறது படக்குழு.