ஆத்ம நிர்பார் தொழிற்சாலை விருது பெற்ற ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம்!

உற்பத்தி திறனுக்கான தேசிய விருதான ஆத்ம நிர்பார் விருதினை பெற்றிருக்கிறது ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம்

வாடிக்கையாளர்களிடம் நம்பகத்தன்மை, சந்தை தேவைகளுக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ளுதல், மாறும் வெளிப்புற மற்றும் உட்புற சூழல்களுக்கு ஏற்ப செயல்பாடுகளில் நிலைத்தன்மை, முன்னேற்றத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் காட்டும் முயற்சி, தேவையான நிலைகளில் முக்கியமான தகவல்களை கிடைக்கச் செய்தல் உள்ளிட்ட 10 குறியீடுகளின் அடிப்படையில் ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்திற்கு ஆத்மநிர்பார்
இந்த ஆலை இவ்விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “விருதுநகர் ஆர்.ஆர்.நகரில் உள்ள ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்தின் ஆலைக்கு `ஆத்மநிர்பார் தொழிற்சாலை விருது’ வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இவ்விருதைப் பெறும் முதல் நிறுவனம் ராம்கோ சிமென்ட்ஸ் தான்.

முன்னணி தொழிற்சாலைகளின் தற்சார்புத் தன்மை, வெளிப்புற நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்ளும் திறன் ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் உற்பத்திக்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் உற்பத்தி போட்டித் திறனுக்கான தேசிய விருது 2022-23 வழங்கியிருக்கிறது.