ஆவடி இராணுவ வாகன தொழிற்சாலையில் உதவித்தொகையுடன் அப்பரண்டிஸ் பயிற்சி – 10வது, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

சென்னை ஆவடியில் உள்ள ராணுவ வாகன தொழிற்சாலையில 10வது மற்றும் ஐடிஐ படித்த 168 பேருக்கு அப்பரண்டிஸ் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

சென்னை ஆவடியில் உள்ள இராணுவ வாகன தொழிற்சாலையில் 168 பேருக்கு டிரேடு அப்பரண்டிஸ் பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. இந்த அப்பரண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பிக்க, 50 % மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது, Fitter, Machinist, Welder(G&E), Electrician ஆகிய தொழிற்பிரிவுகளில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த அப்பரண்டிச் பயிற்சியின்போது 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு முதல் வருடம் ரூ.6000, இரண்டாவது வருடம் ரூ.6,600 உதவித்தொகை வழங்கப்படும். அதேபோல ஐடிஐ படித்திருப்பவர்களுக்கு ரூ.7,700 முதல் ரூ.8050 உதவித்தொகை வழங்கப்படும்.

14.06.2023 தேதியின்படி 15 வயது முதல் 24 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி. எஸ்.டி பிரிவினருக்கு 5 வருடங்களும். ஓபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும் வயது உச்சவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதியானவர்கள் 10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்பில் பெறுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

www.apprenticeship.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கல்வி தகுதியை பதிவு செய்ய வேண்டும்.

மேலும், www.avni.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சான்றிதழ் நகல்களை இணைத்து அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

The Chief Generl Manager,
Heavy Vehicles Factory, Avadi,
Chennai – 600 054

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் ஜூன் 14.