ஆப்பிள் செல்போனை பயன்படுத்தும் பயனாளர்களுக்கு பிரத்யேகமாக ஆப்பிள் பே வசதியை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.
ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஓசூரிலேயே ஆப்பிள் செல்போன் தயாரிக்கும் ஆலையை அமைப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆப்பிள் செல்போனின் பயனாளர்கள் சமீக காலமாக அதிகரித்து வரும் நிலையில், அதனுடைய அனைத்து செயல்பாடுகளும் பிரத்யேகமாக தனித்தன்மை வாய்ந்ததாகவும், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது.
அந்த வகையில் இந்திய பயனர்களுக்கு ஆப்பிள் பே-வை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக National Payment Corporation of India-வுடன் ஆப்பிள் நிறுவனம் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இந்திய பயனர்களுக்காக வேண்டி பிரத்யேகமாக இந்தியாவில் பயன்படுத்தும் வகையில் இதன் இயக்கம் இருக்கும் என தெரிகிறது. கடந்த ஏப்ரலில் ஆப்பிள் நிறுவனம் சார்பில் மும்பை மற்றும் டெல்லியில் ‘ஆப்பிள் ஸ்டோர்’ நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் பே மூலம் ஆப்பிள் செல்போன் பயனாளர்கள் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். மற்ற யுபிஐ செயலிகள் எப்படி செயல்படுகிறதோ அது போலவே இதன் இயக்கம் இருக்கும் என தெரிகிறது. இந்தியாவில் கடந்த மே மாதம் மட்டும் 9 கோடி பேர் யூபிஐ பரிவர்த்தனை மேற்கொண்டுள்ளதாக National Payment Corporation of India தெரிவித்திருக்கிறது.
அதன் அடிப்படையில் இப்போது அப்பிள் செல்போனில் இந்த பயன்பாடு அறிமுகம் ஆக இருக்கும் நிலையில், இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை இன்னும் பல மடங்கு அதிமகாகும் என சொல்லப்படுகிறது.