இந்தியாவில் இருந்து 2 கோடி முட்டைகளை இறக்குமதி செய்த இலங்கை அரசு!

இந்தியாவில் இருந்து தினமும் 10 லட்சம் முட்டைகள் வீதம் 2 கோடி முட்டைகளை இறக்குமதி செய்திருக்கிறது இலங்கை அரசு.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருந்து மீண்டு வருவதற்கு இன்னும் சில வருடங்கள் கூட ஆகலாம் என தெரிவித்திருக்கிறனர்.

இந்நிலையில் மக்களின் நெருக்கடியை குறைக்க பேக்கரி, பிஸ்கட் தயாரிப்பு நிறுவனங்கள், சமையல் ஒப்பந்த நிறுவனங்கள், உணவு விடுதிகளில் ஏற்பட்டுள்ள முட்டைகள் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது இலங்கை அரசு.

அதன் முதல்கட்ட முயற்சியாக இந்தியாவில் இருந்து 2 கோடி முட்டைகளை இறக்குமதி செய்திருக்கிறது. நாள்தோறும் 10 லட்சம் முட்டைகளை மக்களின் சந்தை பயன்பாட்டிற்கு வழங்கி வருகிறது. இந்தியாவில் குறிப்பிட்ட இரண்டு கோழிப் பண்ணைகளில் இருந்து தற்போது இறக்குமதி செய்திருப்பதாகவும், அடுத்து தேவைக்கு ஏற்ப மற்ற பண்ணைகளில் இருந்தும் முட்டைகள் இறக்குமதி செய்ய இருப்பதாக இலங்கை வர்த்தக நிறுவன தலைவர் அசிறி வளிசுந்தரா.