இந்தியாவில் டாப் 10 கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு – முதல் இடத்தில் ஐஐடி மெட்ராஸ், மூன்றாம் இடத்தில் மாநிலக் கல்லூரி!

இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறார் மத்திய கல்வித்துறை அமைச்சர்.

இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் கற்பிக்கும் திறன், மாணவர்கள் கற்றல் திறன், ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை பயிற்சி, பட்டப்படிப்பு முடிவுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு இந்தியாவில் சிறப்பாக செயல்படும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை வருடம்தோறும் வெளியிடுகிறது National Institutional Ranking Framework அமைப்பு.

இந்த அமைப்பு தயாரித்த தரவரிசைப் பட்டிலை மத்திய கல்வித்துறை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் இன்று வெளியிட்டார். அதில் ஐஐடி நிறுவனங்களை பொறுத்தவரை தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதல் இடத்தில் இருக்கிறது மெட்ராஸ் ஐஐடி. அதனை தொடர்ந்து ஐஐடி பெங்களூரு, ஐஐடி டெல்லி ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

அதேபோல இந்தியாவில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் முதல் இடத்தில் இருக்கிறது. அதற்கு அடுத்து ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா பல்கலைக்கழகம், ஜவதாபூர் பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகியவை அடுத்தடுத்து இடங்களில் உள்ளன.

மேலும், கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் டெல்லியில் உள்ள மிரண்டா ஹவுஸ் கல்லூரி முதல் இடத்திலும் இரண்டாம் இடத்தில் இந்து கல்லூரி, மூன்றாம் இடத்தில் சென்னை மாநிலக் கல்லூரி, நான்காம் இடத்தில் கோவை PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி உள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் கொல்கத்தா செயிண்ட் சேவியர் கல்லூரில், டெல்லி அட்மா கல்லூரி, சென்னை லயோலா கல்லூரி ஆகியவை முதல் பத்து இடங்களில் உள்ளன.

இந்த ஆண்டு மொத்தம் 8,686 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. அதில், மொத்த பட்டியலையும் ஆய்வு செய்த National Institutional Ranking Framework அமைப்பு. இந்த தரவரிசைப் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.