இந்தியா – அமெரிக்க இடையேயான உறவு உலகிற்கு நன்மை பயக்கும்! – பிரதமர் மோடி ட்வீட்!

அரசுமுறை சுற்றுப்பயணமாக அமெரிக்க சென்று திரும்பிய பிரதமர் மோடி, இந்தியா – அமெரிக்க இடையேயான உறவு உலகிற்கு நன்மை பயக்கும் என ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்

இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் அமெரிக்காவில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தஙக்ள் கையெழுத்தாகின. புதிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றது.

இந்தநிலையில், அரசு முறை பயணமாக அமெரிக்க, எகிப்து நாடுகளுக்கு சென்றிருந்த பிரதமர் மோடி நள்ளிரவு டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். நாடு திரும்பிய பிரதமர் மோடியை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட எம்.பி.,க்கள் வரவேற்றனர்.

பிரதமர் மோடியின் பயணம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நட்புறவு உலகில் மிக முக்கியமான ஒன்றாகும். மேலும் இது முன்னெப்போதையும் விட வலிமையானது, நெருக்கமானது ஆற்றல் மிக்கது.” என தெரிவித்திருந்தார்.

அவருக்கு பதில் அளித்திருந்த பிரதமர் மோடி, “இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு உலகிற்கு நன்மை பயக்கும். நாம் வாழும் பூமியை சிறப்பானதாகவும், நிலையானதாகவும் மாற்றும். என்னுடைய அமெரிக்க பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான பிணைப்பை இன்னும் பலப்படுத்தும்.” என தெரிவித்திருக்கிறார்.