இந்தியா முழுவதும் உள்ள தபால் அலுவலகங்களில் Gramin Dak Sevak வேலைக்கு 12828 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் உள்ள தபால் அலுவலகங்களில் Gramin Dak Sevak வேலைக்கு 12828 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Gramin Dak Sevak பிரிவின் கீழ் இரண்டு வகையான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய இருக்கிறார்கள். அதில், Branch Post Masters வேலைக்கு விண்ணப்பிக்க, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்தப் பணிக்கு ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை ஊதியம் அளிக்கப்படும். 11.06.2023ம் தேதியின்படி 18 வயது முதல் 40 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள், பொதுமக்களுக்கு தபால்துறை சேவைகளை வழங்குவது, Files And Recordsகளை கையாள்வது. தபால்துறையின் கீழ் செயல்படும் Post Payment Bank தொடர்பான பணிகளை மேற்கொள்வது என தபால் நிலைய பொறுப்பாளராக அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல Assistant Branch Post Master வேலைக்கு விண்னப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சியுன் கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.10,000 முதல் ரூ.24,470 வரை ஊதியம் வழங்கப்படும். 11.06.2023ம் தேதியின்படி 18 வயது முதல் 40 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள், Stamps மற்றும் Stationary பொருட்களை விற்பனை செய்வது, வாட்க்கையாளரின் இருப்பிடத்திற்கே சென்று தபால்களை அளிப்பது, தபால்களை புக்கிங் செய்து பணபரிவர்த்தனைகளை மேற்கொள்வது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தகுதியானவர்கள் 10ம் வகுப்பில் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும், குறைந்தது 100 சதுர அடி பரப்பளவில் கணினி வசதி, இணைய வசதி, மின் இணைப்புடன் கூடிய கட்டடத்தை Post Office இயக்குவதற்கு சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ தயார் செய்ய வேண்டும்.

கட்டிடம் தரைதளத்தில் ஊரின் முக்கிய பகுதியில் அமைந்திருக்க வேண்டும். மேலும் மத்திய அல்லது மாநில அரசுக்கு சொந்தமான கட்டிடமாக இருப்பது விரும்பத்தக்கது. பணி நியமனம் செய்யப்படும் நபர்கள் அதே கிராமத்திலோ அல்லது அருகில் உள்ள கிராமத்திலோ வசிப்பவராக இருக்க வேண்டும். சைக்கிள் அல்லது இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

தகுதியானவர்கள் www.indiapostgdsonline.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூன் 11.