ரா என சொல்லப்படும் இந்திய உளவு அமைப்புக்கு புதிய செயலாளரை அறிவித்த அமைச்சரவை நியமன குழு செயலாளர்.
Research and Analysis Wing என சொல்லக்கூடிய ரா அமைப்பு, இந்தியாவில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுப்பதற்கு, வெளிநாட்டு சதி, உள்நாட்டில் நடக்கும் இந்தியாவுக்கு எதிரான திட்டங்கள் ஆகியவை குறித்து ஆட்சியில் இருக்கும் உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட நாட்டின் கொள்கைகளை வகுக்கும் அமைப்புகளுக்கு தகவல்களை கொடுப்பது தான் இந்த அமைப்பின் வேலை.
மிக முக்கியமான இந்த அமைப்பின் புதிய செயலாளராக ரவி சின்ஹா நியமனம் செய்யப்படுவதற்கான ஒப்புதலை அமைச்சரவையின் நியமனங்களுக்கான குழு வழங்கி உள்ளது.
ஐ.பி.எஸ். அதிகாரியான ரவி சின்ஹா, அமைச்சரவை செயலகத்திற்கான தனி பாதுகாப்பு அதிகாரி மற்றும் சிறப்பு செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவரது பதவி நியமன அறிவிப்பு வெளிவந்து உள்ளது.
ரா அமைப்பின் செயலாளர் பதவியை வகித்து வரும் சமந்த் குமார் கோயலின் பதவி காலம் நடப்பு ஆண்டு ஜூன் மாதம் 30-ந்தேதியுடன் நிறைவடையும் சூழலில், இந்த நியமனம் அறிவிக்கப்பட்டு உள்ளது.