இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு இன்று பிறந்தநாள். கடந்த 1981-ல் இதே நாளில் அவர் பிறந்தார்.
அவருக்கு இந்த இனிய நாளில் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான சுரேஷ் ரெய்னா, ராயுடு மற்றும் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, இந்திய டி20 அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆகியோரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். சமூக வலைதளத்தின் வழியே அவர்கள் இதனை பகிர்ந்துள்ளனர்.
சுரேஷ் ரெய்னா: “என் பெரிய அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். களத்தில் இணைந்தது முதல் நமது கனவுகளை பகிர்ந்து கொள்வது வரையில் நமக்குள் இருக்கும் பந்தம் என்றென்றும் பிரிக்க முடியாதது. தலைவராகவும், நண்பராகவும் உங்களது பலமே என்னை வழிநடத்தும் வெளிச்சம். உங்களுக்கு மகிழ்ச்சி, வெற்றி, நல்ல ஆரோக்கியம் தரும் வகையில் இந்த ஆண்டு அமையும். உங்கள் மாயாஜாலத்தை நிகழ்த்திக் கொண்டே இருங்கள்” என தெரிவித்துள்ளார்.
ஜடேஜா: “2009 முதல் இன்று வரை என் பக்கம் இருக்கும் மனிதர். Mahi (தோனி) பாய்க்கு (அண்ணன்) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். விரைவில் மஞ்சள் ஜெர்சியில் சந்திப்போம்” என தெரிவித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா: “எனது பேவரைட் எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.