இந்திய ரிசர்வ் வங்கியில் அதிகாரி வேலை – மாதம் ரூ.55 ஆயிரம் சம்பளம் ; UG படித்திருந்தாலே போதும்!

இந்திய ரிசர்வ் வங்கியில அதிகாரி வேலைக்கு 200க்கும் அதிகமான காலிப்பணியிடங்களை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் UG & PG பட்டம் படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்திய ரிசர்வ் வங்கியில் Officers In Grade B General, Officers In Grade B – DEPR, Officers Grade B in DSIM ஆகிய வேலைகளுக்கு 291 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Officers In Grade B General வேலைக்கு 222 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

அதேபோல, Officers In Grade B – DEPR வேலைக்கு 14 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, Economics, Finance, Bussiness Economics, Agricultural Economics, Industrial Economics, International Finance, Quantitative Techniques, Banking And Trade Finance ஆகிய பாடப்பிரிவுகளில் முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Officers Grade B in DSIM வேலைக்கு 31 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, Statistics, Mathematical Statistics, Mathematical Economics, Econometrics, Statistics And Informatics, Applied Statistics & Information ஆகிய பாடப்பிரிவுகளில் 55% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இந்தப் பணிகளுக்கு ரூ.55,200 முதல் ரூ.99,750 வரை ஊதியம் அளிக்கப்படும். 1.5.2023ம் தேதியின்படி 21 வயதில் இருந்து 30 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

சென்னை, மதுரை, கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, திருநெல்வேலி, ஆகிய மாவட்டங்களில் ஜூலை 9ம் தேதி மற்றும் 16ம் தேதிகளில் நடைபெறும்.

www.rbi.org.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூன் 9.