இனி மெட்ரோ இரயில் டிக்கெட்டை வாட்சாப் மூலமாகவே எடுத்துக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது மெட்ரோ இரயில் நிறுவனம்
சென்னை மக்களின் பயணத்தை எளிமையாக்குவதற்காக அனைத்து பாதைகளிலும் இப்போது மெட்ரோ இரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும், தினமும் மெட்ரோ இரயிலில் பயணிக்கு பயணிகளுக்கு ரீசார்ஜ் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் ரீசார்ஜ் செய்து 20% தள்ளுபடியுடன் மெட்ரோ இரயிலில் பயணிக்கலாம்.
மேலும் எப்போதாவது பயணிக்கு பயணிகள் டிக்கெட் கவுண்ட்டருக்குச் சென்று மெட்ரோ டிக்கெட் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இனி வாட்சாப் மூலமாகவே மெட்ரோ இரயில் டிக்கெட்டை எடுத்துக்கொள்ளும் வசதி முதல்முறையாக திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
8300086000 என்ற செல்போன் எண்ணுக்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி டிக்கெட்டுகளை பெறலாம். கைப்பேசி மூலம் பதிவு செய்வதால் 20% சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருக்கிறது.