இன்றும் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் சூழலில். இன்றும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

கத்திரி வெயில் 5ம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக தென் தமிழகத்தில் மழை பெய்து வந்தது. இப்போது வட தமிழகத்தி காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

அதுவும் வட சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெவித்திருப்பதோடு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டு உள்ளது.