இன்று ஏற்றத்துடன் தொடங்கிய பின்னர் சரிந்த பங்குச்சந்தை!

வார முதல்நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கிய வர்த்தக நேரத்தின் போது சரிவுடன் காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 138 புள்ளிகள் உயர்வடைந்து 63,522 ஆக இருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி42 புள்ளிகள் உயர்ந்து 18,869 ஆக இருந்தது.

காலை 10:30 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 11.81 புள்ளிகள் சரிவடைந்து 63,372.77 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 13.50 புள்ளிகள் சரிந்து 18,812.50 ஆக இருந்தது.

தனிப்பட்ட நிறுவனங்களின் பங்குகளைப் பொறுத்தவரை எல் அண்ட் டி, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், டைட்டன் கம்பெனி, பஜாஜ் ஃபைனான்ஸ், நெஸ்ட்லே இந்தியா, எம் அண்ட் எம், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டிசிஎஸ், ஏசியன் பெயின்ட்ஸ், ஐடிசி நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.

மேலும், இன்டஸ்இன்ட் பேங்க், என்டிபிசி, கோடாக் மகேந்திரா பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், விப்ரோ, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், இன்போசிஸ், மாருதி சுசூகி, டெக் மேந்திரா, பாரதி ஏர்டெல் நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.