கடந்த இரண்டு நாட்கள் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் தொடங்கியது.
மும்பை பங்குச்சந்தையில் வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 89 புள்ளிகள் உயர்வடைந்து 63,416 ஆக இருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி12 புள்ளிகள் உயர்ந்து 18,828 ஆக இருந்தது.
காலை 10.36 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 170.45 புள்ளிகள் உயர்வடைந்து 63,498.15 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 39.15 புள்ளிகள் உயர்ந்து 18,855.85 ஆக இருந்தது.
தனிப்பட்ட நிறுவனங்களின் பங்குகளைப் பொறுத்தவரை பவர்கிரிடு கார்ப்பரேஷன், ஹெச்டிஎஃப்சி பேங்க், எல் அண்ட் டி, விப்ரோ, ஹெச்டிஎஃப்சி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், அல்ட்ரா டெக் சிமெண்ட், டெக் மகேந்திரா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பவர்கிரிடு கார்ப்பரேஷன், ஹெச்டிஎஃப்சி பேங்க், எல் அண்ட் டி, விப்ரோ, ஹெச்டிஎஃப்சி, பஜாஜ் ஃபின்சர்வ், பாரதி ஏர்டெல், இன்டஸ்இன்ட் பேங்க், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், எம் அண்ட் எம், ஆக்ஸிஸ் பேங்க், டைட்டன் கம்பெனி, டிசிஎஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.
மேலும், இன்போசிஸ், கோடாக் மகேந்திரா, டாடா மோட்டார்ஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், ஏசியன் பெயின்ட்ஸ், ஐசிஐசிஐ பேங்க், என்டிபிசி, நெஸ்ட்லே இந்தியா நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.