இன்று ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை

வர்த்தக நேரத்தின்போது மும்பை பங்குச்சந்தை 130 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கியது

மும்பை பங்குச்சந்தை இன்று வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 223 புள்ளிகள் உயர்வடைந்து 63,193 ஆக இருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 68 புள்ளிகள் உயர்ந்து 18,760 ஆக இருந்தது.

வர்த்தக நேரத்தின்போது காலை 09:50 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 130.90 புள்ளிகள் உயர்வடைந்து 63,100.90 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 44.15 புள்ளிகள் உயர்ந்து 18,735.35 ஆக இருந்தது.

தனிப்பட்ட நிறுவனங்களின் பங்குகளைப் பொறுத்தவரை கோடாக் மகேந்திரா பேங்க், பாரதி ஏர்டெல், விப்ரோ, ஏசியன் பெயின்ட்ஸ், எம் அண்ட் எம், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், இன்போசிஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், என்டிபிசி, ஹெச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் பேங்க், நெஸ்ட்லே இந்தியா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், பவர்கிரிடு கார்ப்பரேஷன், எல் அண்ட் டி நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.

மேலும், இன்டஸ்இன்ட் பேங்க், டைட்டன் கம்பெனி, ஐசிஐசிஐ பேங்க், மாருதி சுசூகி, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், டெக் மகேந்திரா, ஹெச்சிஎஸ் டெக்னாலஜிஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.