இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை

வரலாறு காணாத ஏற்றத்துடன் சில நாட்களாக காணப்பட்ட பங்குச்சந்தை இன்று சரிவுடன் தொடங்கியது.

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 91 புள்ளிகள் சரிவடைந்து 65,387 ஆக இருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 23 புள்ளிகள் சரிந்து 19,365 ஆக இருந்தது.

காலை 09:58 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 59.87 புள்ளிகள் சரிவடைந்து 65,419.18 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 9.95 புள்ளிகள் சரிந்து 19,379.05 ஆக இருந்தது.

தனிப்பட்ட நிறுவனங்களின் பங்குகளைப் பொறுத்தவரை மாருதி சுசூகி, பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் யுனிலீவர், பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல், நெஸ்ட்லே இந்தியா, ஐடிசி, என்டிபிசி, டெக் மகேந்திரா, இன்டஸ்இன்ட் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஆசியன் பெயின்ட்ஸ், எல் அண்ட் டி, பாரதி ஏர்டெல், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ் நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன.

மேலும், கோடக் மகேந்திரா பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், இன்போசிஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டாடா மோட்டர்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, விப்ரோ, பாரதி ஏர்டெல் நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.