இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை!

இன்று பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கி பின்னர் உயரந்தது!

இந்தியப் பங்குச்சந்தைகள் வார இறுதி நாளான இன்று சென்செக்ஸ் 140 புள்ளிகள் சரிவடைந்து 65,644 ஆக இருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 42 புள்ளிகள் சரிந்து 19,454 ஆக இருந்தது.

பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கி பின்னர் வர்த்த நேரத்தின்போது ஏற்றமடையத் தொடங்கியது. காலை 10:18 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 15.64 புள்ளிகள் உயர்வடைந்து 65,801.28 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 12.75 புள்ளிகள் உயர்ந்து 19,510.05 ஆக இருந்தது.

தனிப்பட்ட நிறுவனங்களின் பங்குகளைப் பொறுத்தவரை சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ். டிசிஎஸ், விப்ரோ, டாடா ஸ்டீல், ஐடிசி, ஆக்ஸிஸ் பேங்க், டைட்டன் கம்பெனி, எம் அண்ட் எம், மாருதி சுசூகி, பாரதி ஏர்டெல், ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன.

மேலும், ஐசிஐசிஐ பேங்க், நெஸ்ட்லே இந்தியா, பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச்டிஎஃப்சி, இன்போசிஸ், கோடாக் மகேந்திரா பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், இன்டஸ்இன்ட் பேங்க், பவர்கிரிடு கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, என்டிபிசி, டாடா மோட்டார்ஸ், எல் அண்ட் டி, டெக் மகேந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.