இன்று பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியது…

பங்குச்சந்தையில் இன்று 350 புள்ளிகள் சரிவுடன் தொடங்கிய வர்த்தகம்!

இன்று மும்பை பங்குச்சந்தை வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 50 புள்ளிகள் சரிவடைந்து 63,118 ஆக இருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 13 புள்ளிகள் சரிந்து 18,742 ஆக இருந்தது.

காலை 10:38 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 350.36 புள்ளிகள் சரிவடைந்து 62,817.94 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 59.90 புள்ளிகள் சரிந்து 18,695.55 ஆக இருந்தது.

தனிப்பட்ட நிறுவனங்களின் பங்குகளைப் பொறுத்தவரை டெக் மகேந்திரா, டாடா மோட்டார்ஸ், கோடாக் மகேந்திரா பேங்க், பாரதி ஏர்டெல், விப்ரோ, பவர் கிரிடு கார்ப்பரேஷன், டாடா ஸ்டீல் நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.

மேலும், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், எம் அண்ட் எம், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஹெச்டிஎஃப்சி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், மாருதி சுசூகி, என்டிபிசி, இன்போசிஸ், நெஸ்ட்லே இந்தியா, டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், எல் அண்ட் டி, இன்டஸ்இன்ட் பேங்க், டைட்டன் கம்பெனி, ஐசிஐசிஐ பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ், ஐடிசி, ஆக்ஸிஸ் பேங்க் நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.