இன்று மாலை வெளியாகும் லியோ படத்தில் நடிகர் விஜய் பாடியுள்ள ‘நா ரெடி’ பாடல்!

நடிகர் விஜய் பிறந்தநாளான இன்று அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், லியோ திரைப்படத்தில் அவர் பாடிய ‘நா ரெடி’ பாடல் இன்று மாலை வெளியாகிறது.

நடிகர் விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைபிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் விஜய் பாடியுள்ள ‘நா ரெடி’ பாடலும் இன்று மாலை வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

விஜயின் உறவினரும் நடிகருமான விக்ராந்த், ட்விட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து விஜய்யின் சிறு வயது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், அர்ஜுன் தாஸ், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என அனைத்து தரப்பினரும் சமூக வலைதளத்தில் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.