கோடை காலத்தில் கிடைக்கும் பழவகைகளில் பலா பழம் முக்கியத்தும் வாய்ந்ததாக இருக்கிறது. அதுவும் பல்வேறு சத்துகள் நிறைந்த இந்தப் பழத்தை சாப்பிடுவதால் ரத்த சோகை, இருதய நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.
கோடை காலங்களில் கிடைக்கும் பழவகைகளில் பலா பழத்திற்கு நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றனர். மேலே பார்ப்பதற்கு முட்கள் நிறைந்து கரடுமுரடாக இருந்தாலும்… உள்ளே இருக்கும் பழம் சுவை மிகுந்ததாக இருக்கிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் பலா பழத்தில் இருக்கும் மருத்துவ குணங்கள் குறித்து இப்போது தெரிந்துகொள்ளலாம்.
பலா பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது. பலாப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் இரத்தசோகை வராமல் தடுப்பதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
தைராய்டு குறைபாடு உள்ளவர்கள், இந்த பழத்தைச் சாப்பிட்டால் தைராய்டு குணமாகும். மேலும் இது உடலுக்குத் தேவையான ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. குழந்தைகளுக்கு இந்த பழம் மிகவும் நல்லது. இதனை உண்பதால் எலும்புகள் வலுவடைகின்றன. இதில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால், இது எலும்பு சம்பந்தமான எந்த நோயும் வராமல் தடுக்கிறது.
வைட்டமின் ஏ மற்றும் சி இருப்பதால், நோ எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. கோடை காலங்களில் ஏற்படும் வைரஸ் காய்ச்சல்களில் இருந்து காக்கிறது. இதில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அல்சர், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையை கொண்டது.