இராணுவ கட்டமைப்பிற்கான செலவை 6 % அதிகரித்துள்ள இந்தியா – ஏன்?

உலக நாடுகள் ராணுவக கட்டமைப்பை பலப்படுத்துவதற்கு எவ்வளவு செலவு செய்கின்றன என்பது குறித்த பட்டியலை வெளியிட்டிருக்கிறது ஸ்டாக்ஹோம் சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம்.

ஸ்டாக்ஹோம் சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம், எந்தெந்த நாடுகள் இராணுவ கட்டமைப்பிற்காக எவ்வளவு நிதியை ஒதுக்குகிறது என்பது குறித்த விவரங்களை வெளியிட்டிருக்கிறது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது.

2022-ம் ஆண்டில் இந்தியாவின் இராணுவ கட்டமைப்புக்கான செலவு ரூ.6.68 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. உலக நாடுகள் தங்கள் இராணுவக் கட்டமைப்பை வலிமைப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரையில் 2020-க்குப் பிறகு சீனாவுடன் எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக இந்தியா தனது ராணுவக் கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ராணுவத்துக்கு இந்தியா செலவிடும் நிதி 2021-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022-ல் 6% அதிகரித்துள்ளது.

அதேபோல ஸ்டாக்ஹோம் நிறுவனம் வெளியிட்ட பட்டியலில், இராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. சென்ற ஆண்டில் அமெரிக்கா ரூ.72 லட்சம் கோடி ரூபாய் ராணுவத்துக்கு செலவிட்டுள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள சீனா ரூ.24 லட்சம் கோடி ரூபாய் செலவிடுகிறது, மூன்றாம் இடத்தில் உள்ள ரஷ்யா ரூ.7.06 லட்சம் கோடி ரூபாய் இராணுவத்துக்கு செலவிட்டுள்ளன. இந்தியா இதில் நான்காம் இடத்தில் இருக்கிறது.