உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிக்கு ஜப்பானியர் – சமூக வலைதளம் மூலம் நிதி திரட்டி ஓட்டல் தொடங்கி உதவும் மனிதர்!

உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிக்கு ஜப்பானியர் – சமூக வலைதளம் மூலம் நிதி திரட்டி ஓட்டல் தொடங்கி உதவும் மனிதர்!

ஜப்பானைச் சேர்ந்த சுச்சிக்கோ என்ற 75 முதியவர் சுற்றுலாவுக்காக 2020ம் வருடம் பிப்ரவரி மாதம் உக்ரைனுக்கு வந்திருக்கிறார். அப்போது உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையேயான போர் உச்சத்தில் இருந்தது. அந்தச் சூழலில் மெட்ரோ இரயில் நிலைய குகைப் பாதையில் உக்ரைன் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். அப்போது அவர்களுடன் சேர்ந்து சுச்சிக்கோவும் தஞ்சம் அடைந்துள்ளார்.

உண்ண உணவும், குடிக்க தண்ணீரும் கூட கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் அவதிப்படுவதைப் பார்த்து மனமுடைந்து போன சுச்சிக்கோ, தன்னுடைய சமூக வலைதளத்தின் மூலம் ஜப்பான் மக்களிடையே நிதி திரட்டி கார்க்கிவ் பகுதியில் உள்ள மெட்ரோ இரயில் நிலையத்தில் ஒரு உணவகத்தை உருவாக்கியுள்ளார்.

மனிதாபிமானம் உள்ள மனிதர்கள் பலர் தொடர்ச்சியாக சுச்சிக்கோவுக்கு நிதி உதவி செய்ய இப்போது அந்த உணவத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 500 பேருக்கு இலவசமாக உணவளித்து வருகிறார் சுச்சிக்கோ. அவரது இந்த மனிதநேய சேவையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.