உடல் எடை குறைப்பு முதல் சிறுநீரக ஆரோக்கியம் வரை.. புளியில் இத்தனை நன்மைகளா.?

புளியை அனைவரும் விரும்பி சாப்பிடுவதற்கு முக்கிய காரணமே அதன் புளிப்பு சுவைதான் ஆனால் நாம் நினைத்து பார்க்காத அளவிற்கு புளியில் எண்ணற்ற நன்மைகள் இருக்கிறது. என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இனிப்பு, காரத்திற்கு அடுத்த படியாக அனைவருக்கும் பிடித்த சுவை புளிப்பு என்று கூறலாம். புளி என்று சொன்னாலே பெரும்பாலானோருக்கு சிறு வயது நினைவு வந்துவிடும். நண்பர்களுடன் சேர்ந்து மரத்தில் புளியங்காய் அடித்து சாப்பிடும் சந்தோஷமே தனி. இன்னும் நம்மில் பல பேர் திருட்டுத்தனமாக அடுப்படிக்கு சென்று புளி எடுத்து சாப்பிடுபவர்களும் உண்டு. இப்படிப்பட்ட பல நினைவுகளை புளியை வைத்து சொல்லிக் கொண்டே போகலாம். மேலும் புளியை அனைவரும் விரும்பி சாப்பிடுவதற்கு முக்கிய காரணமே அதன் புளிப்பு சுவைதான். ஆனால் நாம் நினைத்து பார்க்காத அளவிற்கு புளியில் எண்ணற்ற நன்மைகள் இருக்கிறது. என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

எடை இழப்பு : புளியில் நார்ச்சத்து மிகவும் அதிகமாக உள்ளது மேலும் அதில் குறைந்த கொழுப்பே உள்ளதால் எடை இழப்பு பயணத்தில் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.

இதய ஆரோக்கியம் : புளியில் ஃபிளாவனாய்டுகள் உள்ளதால் அவை கெட்ட கொழுப்பைக் குறைத்து, உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைப்பதால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

கல்லீரலுக்கு நல்லது : கல்லீரலுக்கு ஏற்படும் ஃப்ரீ ரேடிக்கல் பாதிப்பை எதிர்க்கும் புரோசியானிடின்கள் எனப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், புளி உங்கள் கல்லீரலுக்கு பல நன்மைகளை சேர்க்கும்.

அமிலத்தன்மையை எதிர்த்துப் போராடுகிறது : புளியானது பொட்டாசியத்தின் சிறந்த மூலபொருளாகும். இது அமிலத்தன்மையின் அளவைக் குறைப்பது மட்டுமல்லாமல் அதிகப்படியான வயிற்று அமிலம் சுரக்கும் பொழுது அதை நடுநிலையாக்குகிறது.

ஆரோக்கியமான சிறுநீரகத்தை ஊக்குவிக்கிறது : புளியில் பொட்டாசியம் அதிகளவில் உள்ளடங்கியிருப்பதால் சிறுநீரகத்திலிருந்து நச்சுகளை அதிகளவில் வெளியேற்ற உதவுகிறது.