உதவி பேராசிரியர் வேலைக்கான UGC தேர்வு – விண்ணப்பிக்க கடைசி நாள் மே 31!

அரசு கல்லூரிளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு தேர்வாகவும், JRF வேலைகளுக்கு விண்ணப்பிக்கவும் UGC Net தேர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. மே 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் வேலை மற்றும் JRF ஆக பணியில் சேர UGC NET தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க, கலை, அறிவியல், மேலாண்மை, பொருளாதாரம், மானுடவியல் உள்ளிட்ட துறைகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 55% சதவிகித மதிப்பெண்கள் பெற்று முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், முதுநிலை பட்டம் இறுதியாண்டு படித்துக்கொண்டு இருக்கும் மாணவர்களும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

நெட் தேர்வு நடைபெறும் தேதியில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் முதுநிலை பட்டப் படிப்பினை முடித்திருக்க வேண்டும். SC, ST, OBC Non Creamy Layer பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 50% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும், இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

உதவி பேராசிரியர் வேலைக்கு சேர விரும்பு நபர்களுக்கு வயது உச்சவரம்பு கிடையாது. JRF ஆக பணியில் சேர விரும்பும் தேர்வர்களுக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும். SC, ST, OBC, Transgender மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 வருடங்கள் வயது உச்சவரம்பில் தளர்வு அளிக்கப்படும். தகுதியானவர்கள் எழுத்து தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும்.

தமிழ்நாட்டில், அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாமக்கல், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருப்பூர், திருவண்ணாமலை, நீலகிரி, வேலூர், விழுப்புரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, சேலம், சிவகங்கை, திருவள்ளூர், நெல்லை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஜூன் 13ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறும்.

www.ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் மே 31.