உயரப்போகிறது முதியோர் உதவித் தொகை ! தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. சென்னை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை செயல்படுத்துவது, கவர்னரின் செயல்பாடுகள் மற்றும் அமலாக்கத்துறை சோதனைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது .

இந்நிலையில் இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை குறித்து விவாதிக்கப்பட்டது . மேலும், ஆதரவற்ற முதியோர் மற்றும் கைம்பெண் மாத உதவித்தொகையை ரூ. 1,000 லிருந்து ரூ. 1,200 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது .