“உயர்கல்வி பயில அனைத்து உதவிகளும் வழங்கப்படும்” – மாணவி நந்தினிக்கு நம்பிக்கை அளித்த முதல்வர்

+2 பொதுத்தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 94.03 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். நேற்று வெளியான தேர்வு முடிவில், திண்டுக்கல், அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்ற மாணவி நந்தினி அனைத்து பாடங்களிலும் முழு பெண்கள் பெற்று 600க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்திருந்தார்.

இந்நிலையில் மாணவி நந்தினி தன் பெற்றோர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியையுடன் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, மாணவியிடம், “உயர்கல்வி பயில்வதற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்” என நம்பிக்கை அளித்தார்.