உருளைக்கிழங்கு ஆரோக்கியமற்ற காய்கறியா..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

உருளைக்கிழங்குகள் ஆரோக்கியம் நிறைந்ததா இல்லையா என்பது உலக அளவில் வாதிடப்பட்டு வருகிறது. ஒருபுறம் பார்க்கும்பொழுது இது ஒரு காய்கறியாக இருக்கிறது. மறுபுறம் உருளைக்கிழங்கில் அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளது.

உருளைக்கிழங்கை வெறுத்து ஒதுக்குபவர்களை காண்பது அரிது. மிகவும் குறைந்த விலையில் எளிதாக கிடைக்கும் இந்த உருளைக்கிழங்கு சுவையை அள்ளி அள்ளித் தருகிறது. உருளைக்கிழங்கு வைத்து ஏராளமான உணவு வகைகள் தயாரிக்கப்படுகிறது. என்னதான் உருளைக்கிழங்கு டேஸ்ட்டாக இருந்தாலும் அதனை தினமும் சாப்பிடலாமா என்ற கேள்வி எழுகிறது.

உருளைக்கிழங்குகள் சாப்பிடுவது ஆரோக்கியமானதா? உருளைக்கிழங்குகள் ஆரோக்கியம் நிறைந்ததா இல்லையா என்பது உலக அளவில் வாதிடப்பட்டு வருகிறது. ஒருபுறம் பார்க்கும்பொழுது இது ஒரு காய்கறியாக இருக்கிறது. மறுபுறம் உருளைக்கிழங்கில் அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் அதிக கிளைசிமிக் எண் கொண்டுள்ள காரணத்தால் இதனை சாப்பிட்டவுடன் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. உணவு நிபுணர்களை பொறுத்தவரை, உருளைக்கிழங்குகள் ஆரோக்கியமானது மற்றும் ஊட்டச்சத்து நிறைந்தவை. அவற்றில் நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் C மற்றும் வைட்டமின் B6 போன்ற உடலுக்கு பயனளிக்கும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. உருளைக்கிழங்கை ஆரோக்கியம் அற்றதாக மாற்றுவதே அதனை நாம் சமைக்கும் விதம்தான்.

ஆகவே, உருளைக்கிழங்கை ஆரோக்கியமாக மாற்றுவதும் அல்லது ஆரோக்கிய மற்றதாக மாற்றுவதும் அதனை சமைக்கும் முறையில் அமைகிறது. உதாரணமாக எண்ணெயில் பொரித்தெடுக்கப்படும் ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ் வேகவைத்த உருளைக்கிழங்கை காட்டிலும் மிகக் குறைந்த ஊட்டச்சத்துக் கொண்டதாக கருதப்படுகிறது. தினமும் உருளைக்கிழங்கு சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருப்பவர்கள் அதனை பேக் செய்தோ, வேக வைத்தோ அல்லது ஏர் ஃபிரை செய்தோ சாப்பிடலாம். முடிந்த அளவு உருளைக்கிழங்கை எண்ணெயில் பொரித்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

உருளைக்கிழங்கில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளைப் பொறுத்தவரை அவை நமக்கு பலன்களை தான் தருகின்றன. நமது மூளை மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றலை கார்போஹைட்ரேட் வழங்குகிறது. எனவே கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நமக்கு எல்லா விதத்திலும் பலன் அளிக்கிறது. அதே நேரத்தில் புரோட்டீன் மற்றும் கொழுப்பை விட கார்போஹைட்ரேட் விரைவாக செரிமானமடைந்து, நமது உடலால் உறிஞ்சப்படுகிறது.

உருளைக்கிழங்கை நாம் எவ்வாறு சமைத்து சாப்பிடுகிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ, அதனை வேறு எந்த உணவுடன் சாப்பிடுகிறோம் என்பதும் சமமாக முக்கியமானது. எனவே உருளைக்கிழங்கை சீஸ் அல்லது மையோ போன்ற அதிக கலோரி கொண்ட உணவுகளுடன் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

தினமும் உருளைக்கிழங்கு சாப்பிடலாமா?​ தினமும் உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் குறையும் என்று உணவு நிபுணர்கள் கறுகின்றனர். ஆனால் அதனை எண்ணெயில் பொரித்து எடுத்தோ அல்லது அதிக கலோரி மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளுடன் சாப்பிடாத வரை மட்டுமே நமக்கு பலன் கிடைக்கும். உருளைக்கிழங்குகளில் உள்ள நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் நமது இதயத்திற்கு நன்மை பயக்கிறது. இதயம் சீராக செயல்படுவதற்கு பொட்டாசியம் சத்து அவசியமாக கருதப்படுகிறது.

உருளைக்கிழங்கு சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கலாமா? உடல் எடை குறைப்பு பயணத்தில் இருப்பவர்கள் கூட தினமும் உருளைக்கிழங்கை சாப்பிடலாம். எனினும், அதனை அதிகப்படியாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மீண்டும் ஃப்ரைடு பொட்டேட்டோ அல்லது சீஸ் போன்ற அதிக கலோரி உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கவும்.