உலகத் தரத்தில் அமையவுள்ள பொருநை அருங்காட்சியகம் – அடிக்கல் நாட்டிய முதல்வர்

உலகத்தரத்தில் அமையவுள்ள பொருநை அருங்காட்ச்சியகத்திற்கு அடிக்கல் நாட்டி துங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கடந்த ஆண்டு சட்டசபையில், முதலமைச்சர் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில், “திருநெல்வேலி மாநகரில் பொருநை நாகரிகத்தை மையப்படுத்தி பொருநை நாகரிகத்தின் அடிநாதமாக இருக்கும் தாமிரபரணி ஆற்றின் கரையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளையில் அகழாய்வு மூலம் கிடைத்த பல்வேறு பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் நான்கு வழிச்சாலையில் ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

மொத்தம் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள இந்த அருங்காட்சியகத்திற்கு 13 ஏக்கர் பரப்பளவில் இடம் கையகப்படுத்தப்பட்டது. உலகத்தரத்தில் அமைய உள்ள இந்த அருங்காட்சியகத்திற்கான கட்டுமான பணிகளை காணொளி காட்சியின் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.