2020ம் ஆண்டி உலகம் முழுவதும் 1.34 கோடி குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதியம் மற்றும் தாய் சேய் குழந்தைகள் சுகாதார கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
உலகம் முழுவதும் 2020ம் ஆண்டில் 9.9% குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதியம் மற்றும் தாய் சேய் குழந்தைகள் சுகாதார கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
ஐ.நா.வெளியிட்டுள்ள அறிக்கையில், “37 வாரத்திற்கு முன்பாகவே குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 2010ம் ஆண்டை விட 2020ம் ஆண்டில் அதிகர்த்திருக்கிறது. 2010ல் 9.8% சதவிகிதமாக இருந்த குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 2020ம் ஆண்டு 9.9% ஆக அதிகரித்திருக்கிறது. அதில் சுமார் 10 லட்சம் குழந்தைகள் உயிரிழந்துவிட்டன.
10 ஆண்டுகள் இடைவெளியில் போர், பருவநிலை மாற்றம், கொரோனா வைரஸ் தாக்கம் விலைவாசி உயர்வு காரணமாக பிரசவ தேதிக்கு முன்னராகவே அதாவது 37 வாரங்களுக்கு முன்னதாகவே பிறந்திருக்கின்றன. அதில் காற்று மாசுபாடு காரணமாக 60 லட்சம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
அதனால் பருவநிலை மாற்றம், மாசுபாடு ஆகியவற்றை கட்டுப்படுத்தும் வகையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் நலனை கருத்தில் கொண்டு கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.” என ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்திருக்கிறது.