பசுபிக்கடலில் ஏற்படும் எல் நினோ பிரச்னையினால் உலகின் பல்வேறு நாடுகளில் வெப்பநிலை அதிகரித்து வெப்பக்காற்று வீசும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
பசுபிக் பெருங்கடல் நீரின் வெப்பம் அதிகரிக்கும் மாற்றத்தைதான் விஞ்ஞானிகள் எல் நினோ என்கிறார்கள். வருடம்தோறும் கோடை காலங்களில் பசுபிக் பெருங்கடலின் வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.
அதுவும், வரலாற்றிலேயே 2016ம் வருடத்தில் தான் உலக அளவில் வெப்பநிலை அதிகமாக காணப்பட்ட வருடம் என்கிறார்கள். அதன்பிறகு கடந்த சில வருடங்களாக பசுபிக் கடலில் ஏற்படும் வெப்பநிலையின் அளவு குறைந்திருக்கிறது.
ஆனால், தற்போது ஏற்பட்டிருக்கும் கால்நிலைச்சூழல் மாற்றத்தினால், 2023 மற்றும் 2024ம் வருடத்தில் முன்பு ஏற்பட்டத்தைவிட வெப்பநிலை அதிகரிக்கும் ; மீண்டும் எல்நினோ பிரச்னையை உலகம் சந்திக்க நேரிடும் என எச்சரித்திருக்கிறார் கார்லோ பவுண்டெம்போ என்கிற சூழலியல் ஆய்வாளர்
2022ல் ஐரோப்பா அதிக வெப்பம் நிறைந்த கோடை காலத்தை எதிர்கொண்டது. அதேபோல அண்டார்ட்டிகா கடலில் பனிப்பாறைகள் உருகியதால், பாக்கிஸ்தானில் அதிக மழப்பொழிவு ஏற்பட்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வழக்கமாக உலகின் வெப்பநிலை அளவு எந்த தொழிற்சாலைகளும் இயங்காத நேரத்தில் 1.2 செல்ஸியசாக இருந்திருக்கிறது. இப்போது அதிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு அதிகரித்திருப்பதால். இந்த வருடம் அதிக வெப்பக்காற்றை மக்கள் அனுபவிக்க வேண்டியதாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார் சூழலியல் ஆய்வாளர் கார்லோ.