உலகின் துயரமான நாடுகள் பட்டியலில் இந்தியா..!

உலகின் துயரமான நாடுகள் பட்டியலை வெளியிட்டிருக்கிறார் பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹன்கே.

வேலையின்மை, பணவீக்கம், வங்கிக் கடன், ஜிடிபி ஆகியவற்றின் அடிப்படையில் உலகின் துயரமான நாடுகளைப் பட்டியலிட்டிருக்கிறார் பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹன்கே.

இந்தப் பட்டியலில் பணவீக்கம் மிக அதிகமாக உள்ள நாடான ஜிம்பாபே முதல் இடத்தில் இருக்கிறது. முதல் பத்து நாடுகள் பட்டியலில், வெனிசுலா, சிரியா, லெபனான், சூடான், அர்ஜெண்டினா, ஏமன், உக்ரைன், கியூபா, துருக்கி ஆகிய நாடுகள் உள்ளன.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை, 11வது இடத்தில் இருக்கிறது. அடுத்தடுத்து 12 முதல் 15 இடங்களில் ஹைதி, அங்கோலா, டோங்கா, கானா நாடுகள் உள்ளன.

இதில் இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது என்ற சந்தேகமும் கேள்வியும் எல்லோருக்கும் எழலாம். மொத்தம் அவர் 157 நாடுகளை துயரமான நாடுகள் என பட்டியலிட்டிருக்கிறார் ஸ்டீவ் ஹன்கே. அதில் இந்தியா 103வது இடத்தில் இருக்கிறது.