டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை வெற்றிகரமாக நடத்த உதவிய உலக சுகாதார நிறுவன தலைவருக்கு விருது வழங்கப்பட்டது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக அளவில் நடக்கும் மிகவும் பிரபலமான ஒலிம்பிக் போட்டி கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக நடைபெறவில்லை. ஆனால், 2021ம் ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக நடைபெற்றது.
அந்தப் போட்டி நடைபெறுவதற்கு பெரும் உதவியாக இருந்த உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதோனோம் கேப்ரியாஸுக்கு மிக உயரிய விருதான ஒலிம்பிக் ஆர்டர் விருதினை வழங்கி கவுரவித்திருக்கிறது ஒலிம்பிக் கமிட்டி. இதனை ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச் நேரில் சென்று அவருக்கு வழங்கினார். மேலும் உலக சுகாதார நிறுவனத்திற்கும் விருது வழங்கப்பட்டது.