உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணி : பிசிசிஐ அறிவிப்பு!

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியை அறிவித்திருக்கிறது பிசிசிஐ.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த இறுதிப் போட்டிக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ. இன்று அறிவித்தது.

ரோஹித்ஷர்மா தலைமையிலான இந்த அணியில் மொத்தம் 15 பேர் இடம்பெற்றுள்ளனர். சுப்மன்கில், புஜாரா, வீராட் கோலி, ரகானே, லோகேஷ் ராகுல், கே.எஸ்.பரத், அஸ்வின், ஜடேஜா, அக்ஷர் படேல், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனட்கட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

15 மாதங்களுக்கு ரகானே இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 34 வயதான ரகானே 82 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டில் ஆடினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் ரகானே ஐ.பி.எல். போட்டியில் இந்த சீசனில் 5 ஆட்டத்தில் 2 அரை சதத்துடன் 209 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அவரது சாதனைகள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்தவர் என்பதால் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ தெரிவித்திருக்கிறது.

  • பிரசாந்த் நடித்துள்ள ‘அந்தகன்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் !

    / சினிமா/Leema Rose.SP சென்னை: பிரசாந்த் நடித்துள்ள ‘அந்தகன்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, தபு உள்ளிட்டோர் நடித்த படம் ‘அந்தாதூன்’. 2018-ல் வெளியான இப்படம் அந்த ஆண்டின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக மாறியது. ‘அந்தாதூன்’ படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார் பிரசாந்தின் தந்தை தியாகராஜன். படத்தை அவரது ஸ்டார் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்துள்ளார். நாயகியாக ப்ரியா…


  • பங்குச் சந்தை வர்த்தகத்தில் நேற்று கடும் சரிவு காணப்பட்டது!

    / வணிகம்/Leema Rose.SP மும்பை: பங்குச் சந்தை வர்த்தகத்தில் நேற்று கடும் சரிவு காணப்பட்டது. சென்செக்ஸ் 738.81 புள்ளிகள் சரிந்து 80,604 ஆகவும், நிஃப்டி 269.95 புள்ளிகள் சரிந்து 24,530 ஆகவும் குறைந்துள்ளது. வர்த்தக தொடக்க நேரத்தில் சென்செக்ஸ் 81,587 ஆக உயர்ந்துபுதிய உச்சம் தொட்டது. ஆனால்,வர்த்தக முடிவில் அது 80,604 ஆக சரிந்தது. இதனால், முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடிஇழப்பு ஏற்பட்டது.வரும் 23-ம்தேதி மத்திய பட்ஜெட் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதால் பங்குச்…


  • மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் நேற்று 1,400 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன!

    / உலகம்/Leema Rose.SP வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் நேற்று 1,400 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 3,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் தாமதமாக இயக்கப்பட்டன. மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையால் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, தைவான், ஐக்கிய அரபு அமீரகம், தென்கொரியா, அயர்லாந்து, துருக்கி, கனடா உள்பட பல்வேறு நாடுகளில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. அமெரிக்காவின் யூனைடெட் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் விமான…