வார இறுதி நாளான இன்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியது.
மும்பை பங்குச்சந்தை வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 94 புள்ளிகள் உயர்வடைந்து 62,942 ஆக இருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 29 புள்ளிகள் உயர்ந்து 18,664 ஆக இருந்தது.
காலை 10:11 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 77.89 புள்ளிகள் உயர்வடைந்து 62,926.53 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 10.80 புள்ளிகள் சரிந்து 18,623.75 ஆக இருந்தது.
நிறுவனங்களின் பங்குகளைப் பொறுத்தவரை ஆக்ஸிஸ் பேங்க், டாடா மோட்டார்ஸ், எல் அண்ட் டி, பஜாஜ் ஃபைனான்ஸ், இன்டஸ்இன்ட் பேங்க், டைட்டன் கம்பெனி, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், நெஸ்ட்லே இந்தியா, ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், மாருதி சுசூகி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.
ஹிந்துஸ்தான் யுனிலீவர், விப்ரோ, டெக் மகேந்திரா, டாடா ஸ்டீல், இன்போசிஸ், எம் அண்ட் எம், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, என்டிபிசி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், கோடாக் மகேந்திரா பேங்க், பாரதி ஏர்டெல், டிசிஎஸ், ஐடிசி பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.