ஏற்றத்துடன் தொடங்கிய இன்றைய பங்குச்சந்தை

வார இறுதி நாளான இன்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியது…

புதன்கிழமை சென்செக்ஸ் 64,000 புள்ளிகளையும், நிஃப்டி முதன் முறையாக 19,000 புள்ளிகளையும் தொட்டு புதிய சாதனை படைத்திருந்தது. வியாழக்கிழமை விடுமுறை என்பதால் இன்றைய பங்குச்சந்தை கனிசமான புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியிருக்கிறது.

இந்தியப் பங்குச்சந்தை இன்று வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 357.70 புள்ளிகள் உயர்வடைந்து 64,273.12 ஆகவும், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 99.50 புள்ளிகள் உயர்ந்து 19,071.60 ஆகவும் இருந்தது.

காலை 10:10 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 432.181 புள்ளிகள் உயர்வடைந்து 64,347.60 ஆகவும், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 106.00 புள்ளிகள் உயர்ந்து 19,078.10 ஆகவும் இருந்தது.

தனிப்பட்ட நிறுவனங்களின் பங்குகளைப் பொறுத்தவரை ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பவர்கிரிடு கார்ப்பரேஷன், இன்போசிஸ், எம் அண்ட் எம், இன்டஸ்இன்ட் பேங்க், டெக் மகேந்திரா, பஜாஜ் பைனான்ஸ், விப்ரோ, டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஆக்ஸிஸ் பேங்க், எல் அண்ட் டி, நெஸ்ட்லே இந்தியா, கோடாக் மகேந்திரா பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், அல்ட்ராடெக் சிமெண்ட், டைட்டன் கம்பெனி, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் இருந்தன.

மேலும், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க், பாரதி ஏர்டெல், ஆக்ஸிஸ் பேங்க் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.