ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை!

இன்று பங்குச்சந்தை ஏறத்துடன் தொடங்கியது.

உலகளாவிய சந்தைகளில் நிலவிய சாதகமான சூழல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளின் இந்த வாரத்தின் முதல் நாள் வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கின.

இன்றைய பங்குச் சந்தை வர்த்தக துவக்கத்தின்போது ஏற்றத்துடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 320 புள்ளிகள் உயர்வடைந்து 61,372 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 87 புள்ளிகள் உயர்ந்து 18,156 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை IndusInd Bank, M & M, Bajaj Finserv, Bajaj Finance, Kotak Mahindra , Tata Motors, Powergrid Corporation, Axis Bank, HDF, NDBC, Reliance Industries, Ultra Tech cement, SBI, Wipro, Maruti Suzuki, IDC, Hindustan unilever, Titan Company, TCS, Nestle India, HCL Technologies, Bharathi Airtel, Tech Mahindra ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. Sun Pharma Industries, Asian Paints, L & T நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனே காணப்பட்டன.