ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை

இன்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியது

மும்பை பங்குச்சந்தை வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 257 புள்ளிகள் உயர்வடைந்து 62,981 ஆக இருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 74 புள்ளிகள் உயர்ந்து 18,676 ஆக இருந்தது.

காலை 10:22 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 328.21 புள்ளிகள் உயர்வடைந்து 63,052.92ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 90.10 புள்ளிகள் உயர்ந்து 18,691.60 ஆக இருந்தது.

நிறுவனங்களின் பங்குகளைப் பொறுத்தவரை ஹிந்துஸ்தான் யுனிலீவர், நெஸ்ட்லே இந்தியா, ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், டெக் மகேந்திரா, இன்போசிஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், ஐடிசி, டைட்டன் கம்பெனி, அல்ட்ரா டெக் சிமெண்ட், மாருதி சுசூகி, இன்டஸ்இன்ட் பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, விப்ரோ, என்டிபிசி, , டிசிஎஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், பாரதி ஏர்டெல், எல் அண்ட் டி நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.

மேலும், கோடாக் மகேந்திரா பேங்க், எம் அண்ட் எம், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.