ஏற்றத்துடன் தொடங்கி பின்னர் சரிந்த பங்குச்சந்தை…

பங்குச்சந்தை தொடக்கத்தில் ஏற்றத்துடனும் பின்னர் வர்த்தக நேரத்தின் போது சரிவுடனும் காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தை வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 75 புள்ளிகள் உயர்வடைந்து 63,055 ஆக இருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 17 புள்ளிகள் உயர்ந்து 18,682 ஆக இருந்தது.

வர்த்தக நேரத்தின்போது காலை 10:22 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 18.49 புள்ளிகள் சரிவடைந்து 62,960.88 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 3.25 புள்ளிகள் சரிந்து 18, 662.25 ஆக இருந்தது.

தனிப்பட்ட நிறுவனங்களின் பங்குகளைப் பொறுத்தவரை ஐடிசி, டைட்டன் கம்பெனி, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், எம் அண்ட் எம், இன்டஸ்இன்ட் பேங்க், டாடா மோட்டார்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயின்ட்ஸ், மாருதி சூசுகி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.

மேலும், பவர்கிரிடு கார்ப்பரேஷன், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், டிசிஎஸ், டாடா ஸ்டீல், என்டிபிசி, பாரதி ஏர்டெல், பஜாஜ் பின்சர்வ், ஹெச்டிஎஃப்சி பேங்க், கோடாக் மகேந்திரா பேங்க், டெக் மகேந்திரா, ஹெடிஎஃப்சி, எல் அண்ட் டி நிறுவனங்களின் பங்குகள் சரிடன் காணப்பட்டன.