ஏற்ற இறக்கம் இல்லாமல் சமநிலையில் தொடங்கிய பங்குச்சந்தை!

இன்று ஏற்றமும் இறக்கமும் இல்லாத ஒரு நிலையுடன் தொடங்கியது பங்குச்சந்தை.

மும்பை பங்குச்சந்தை வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 21 புள்ளிகள் உயர்வடைந்து 62,643 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 15 புள்ளிகள் உயர்ந்து 18,550 ஆக இருந்தது.

காலை 10:16 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 36.12 புள்ளிகள் உயர்வடைந்து 62,658.36 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 41.35 புள்ளிகள் உயர்ந்து 18,575.75 இருந்தது.

நிறுவனங்களின் பங்குகளை பொறுத்தவரை ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஏசியன் பெயின்ட்ஸ், டிசிஎஸ், டெக் மகேந்திரா, ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்டிஎஃப்சி, நெஸ்ட்லே இந்தியா, விப்ரோ, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எல் அண்ட் டி, ஹெச்டிஎஃப்சி பேங்க், டாடா ஸ்டீல்ஸ், இன்போசிஸ் சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஐசிஐசிஐ பேங்க், டைட்டன் கம்பெனி பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.

பாரதி ஏர்டெல், கோடாக் மகேந்திரா பேங்க், மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஐடிசி, இன்டஸ்இன்ட் பேங்க், என்டிபிசி, பஜாஜ் ஃபின்சர்வ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எம் அண்ட் எம் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.