ஏ.வி.எம் ஹெரிடேஜ் மியூசியத்தைச் சுற்றிப்பார்த்து நெகிழந்த நடிகர் ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் 80களில் நடித்த திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தைச் சுற்றிப்பார்த்தார்.

ஏவிஎம் புரொடக்ஷன்ஸுக்கு சொந்தமான ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன், திமுக எம்பி டி.ஆர் பாலு, அமைச்சர் கே.பொன்முடி, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், நடிகர் சிவகுமார் மற்றும் பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த மியூசியத்தில் முரட்டுக்காளை, சகலகலா வல்லவன், முந்தானை முடிச்சு, சம்சாரம் அது மின்சாரம், எஜமான் உள்ளிட்ட பல படங்களின் படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட கேமராக்கள், மோட்டார் பைக்குகள் மற்றும் கார்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும் 1983ல் தமிழில் வெளியான பாயும் புலி என்கிற படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய சுசுகி ஆர்வி 90, சிவப்பு நிற பழமை வாய்ந்த எம்ஜி டிபி கார் மற்றும் 2007ல் வெளியான ‘சிவாஜி; தி பாஸ்’ படத்தின் கதாபாத்திரமான சிவாஜி சிலை உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்த்திற்கு வருகைதந்து சுற்றிப்பார்த்தா. அப்போது தான் நடித்த திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட சுசுகி கார் உள்ளிட்ட பொருட்களை எல்லாம் தொட்டுப் பார்த்து மகிழ்ச்சியில் நெகிழ்ந்தார்.