ஐபிஎல் அப்டேட் : இன்று பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மோதல்

இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

16 ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல நகரங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதுவரை பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடிய 7 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றியும் மூன்று போட்டிகளில் தோல்வியும் அடைந்திருக்கிறது. கடந்த ஆடத்தில் மும்பை அணியை 13 ரன்கள் வித்யாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ்.

அதேபோல லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி விளையாடிய 7 போட்டிகளில் நான்கு போட்டிகளில் வெற்றியும் 3 போட்டிகளில் தோல்வியும் அடைந்திருக்கிறது. கடந்த ஆட்டத்தில் குஜராஜ் டைடன்ஸ் அணியுடன் மோதி தோல்வி அடைந்தது. அதனால் இன்றைய ஆட்டம் அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

இன்று இரவு பஞ்சாபில் நடைபெற இருக்கிற இந்த போட்டியில் யார் வெற்றி பெறப்போவது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.