நெருக்கடியான சூழலை எதிர்கொண்ட ஜடேஜா சிஎஸ்கே அணிக்கு ஒரு வரலாற்று வெற்றியை உறுதிப்படுத்தியதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் குஜராத் – சென்னை அணிகள் மோதின. முடிவில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் படைக்கு வாழ்த்துக்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒரு திட்டத்துடன் தோனி என்ற மனிதனின் கீழ் 5வது ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கேயின் மஞ்சள் படைக்கு வாழ்த்துக்கள்..
இது மிகச் சிறந்த கிரிக்கெட் போட்டி.. இதில் நெருக்கடியான சூழலை எதிர்கொண்ட ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு வரலாற்று வெற்றியை உறுதிப்படுத்தினார்.” என்று அதில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.