ஒடிசாவில் கோர இரயில் விபத்து – 288 பேர் பலி ; 900 பேர் காயம்

நேற்று இரவு 7 மணிக்கு ஒடிசாவில் ஏற்பட்ட இரயில் விபத்தில் இப்போது வரை 233 பேர் மரணம் அடைந்திருப்பதாகவும், 900 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொல்கத்தாவின் ஷாலிமார்- சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இரயில் நேற்று இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே தடம் புரண்டு கோர விபத்து ஏற்பட்டது. இரயில் தடம்புரண்டு மற்றொரு தண்டவாளத்தில் விழுந்த நிலையில் பெங்களூரில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்ற இரயில், தடம்புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இரயிலின் பெட்டிகள் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து தேசிய மற்றும் மாநில மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். விடிய விடிய மீட்பு பணிகள் நடைபெற்து வருகிறது. ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணி நடைபெறுகிறது.

இந்த கோர சம்பவத்தில் தற்போதுவரை 288 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும் 900க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த விபத்து சம்பவம் குறித்து ஆறுதல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி உயிரிழந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும், ரயில் விபத்து குறித்து ஆய்வு செய்ய பிரதமர் மோடி இன்று ஒடிசா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலாஷோரில் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட பின், கட்டாக்கில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.