ஒடிசாவில் நடந்த கோரமண்டல் ரயில் விபத்துதில் இறந்தவர்களுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இரங்கல் செய்தி

ஒடிசாவில் நடந்த கோரமண்டல் ரயில் விபத்து நாடு முழுவதும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கோர விபத்தினால் சுமார் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் 9000 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் வருகின்ற செய்திகள் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

புதுச்சேரியை சார்ந்தவர்கள் யாரேனும் இந்த விபத்தில் சிக்கி இருப்பதாக தெரிந்தால் அவர்களை உடனடியாக மீட்கவும் அவர்களுக்கு தேவையான அவசர உதவிகளை மேற்கொள்ள உதவும் வகையில் புதுச்சேரி மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கீழ்காணும் எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம் இந்த அவசரகால மையம் 24 மணி நேரமும் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் : 1070,1077,112. 0413-2251003,2255996